Tuesday, March 18, 2008

நாமே மின்சாரம் தயாரிக்கலாமா ?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி.விவசாயத்துடன் பகுதிநேர பணியாக மின் மோட்டார்களுக்கு காயில் கட்டும் பணியை செய்துவருகிறார்.தனது தோட்டத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார்.அந்த வீட்டிற்க்கு மின்இணைப்புதர மின்வாரியம் காலதாமதம் செய்தது.உடனே இவர் தனது சொந்த அனுபவத்தை வைத்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தார்.வீட்டு மாடியில் 12அடி உயரத்தில் 6 இரும்பு இறக்கை கொண்டவிசிறியை அமைத்தார்.விசிறியின் பின்பகுதியில் டைனமோவை பொருத்தி சிறியசக்கரத்தை சுழலச்செய்து மின்சாரம் உற்பத்திசெய்கிறார்.
உற்பத்தியாகும் மின்சாரம் வீட்டின் உள்ளே இருக்கும் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.50 கிலோ எடை கொண்ட இந்த காற்றாலையில் தினமும் 400முதல் 600 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் டியூப்லைட்,டிவி, மின்விசிறி போன்றவை நன்றாகவே இயங்குகின்றன. நன்கு காற்று வீசும் இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்க்கு தேவையான மின்சப்ளைபெற ரூ.15 ஆயிரம் போதுமானது. இரும்புஇறக்கை,பேட்டரி,இன்வெட்டர்,மின்கோபுரம் அமைத்துவிடலாம்.இதில் இருந்து நாள்தோறும் 500 வாட்ஸ் மின்உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள மின்பற்றாக்குறையைத் தீர்க்கவும், மரபு சாரா எரிசக்தியை அனைவரும் பயன்படுத்தவும் அரசு இதுபோன்ற விசயங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

5 comments:

Athisha said...

மழைநீர் சேமிப்பு திட்டம் போல் இதையும் வீடுகள் தோறும் அமல் படுத்தினால் , மிந்த்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை . சுற்றுசூழலும் காக்கப்படும் . நல்ல செய்தி நன்றி

உண்மைத்தமிழன் said...

நண்பரே,

அவசியமான ஒன்றைத்தான் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி..

அனைத்து விஷயங்களுக்கும் அரசையே அணுகுவதைவிட நாமே அதை எதிர்கொண்டு தீர்த்துக் கொள்வது நமக்கும் நல்லதுதான்.. அந்த விவசாயிக்கு எனது வாழ்த்துக்கள்.

அரசுகளும் இது போன்ற முயற்சிகளை தாமே முன் வந்து செய்தால் நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் அரசுகளை இது போன்ற மக்கள் பணிகள் பக்கம் திருப்புவது தற்போதைய நமது ஜனநாயக நாட்டில் எவ்வளவு சிரமம் என்பதனை தாங்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தமிழ்மணத்தில் இன்னமும் சேரவில்லையெனில் உடனே இணைந்து கொள்ளவும். அப்போதுதான் இன்னும் நிறைய பேருக்கு இதைப் படிக்கும் வாய்ப்பு கிட்டும்.

தமிழ்மணத்திலேயே இணைப்புச் செயல்பாடுகள் பற்றி எளிய விளக்கவுரைகள் இருக்கின்றன. அதனைத் தொடர்பு கொண்டு அதே போல் செய்தீர்களானால் இந்த வலையுலகில் உங்களை ஐக்கியமாக்கிக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

சரவணன் said...

தகவலுக்கு நன்றி. சிறிய குறை:

//இந்த காற்றாலையில் தினமும் 400முதல் 600 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது.//

//இதில் இருந்து நாள்தோறும் 500 வாட்ஸ் மின்உற்பத்தி செய்யலாம்.//

இந்த வரிகள் அறிவியல் ரீதியில் பிழையானவையாக உள்ளன. வாட்ஸ்-இல் அளக்கப்படுவது மின்திறன் ஆகும் (power). அதாவது ஒரே நேரத்தில் எத்தனை கருவிகளை இயக்க முடியும் என்பதைக் குறிப்பது.

தினமும் எவ்வளவு மின்சக்தி (energy) உற்பத்தி செய்யலாம் என்பதை கிலோவாட்ஸ்-மணி (kW h) என்ற அலகில் தான் அளக்க முடியும். 'இந்த மாதம் எங்கள் வீட்டில் இத்தனை யூனிட் மின்சாரம் செலவாச்சு' என்கிறோமே அந்த அலகுதான்.

உங்கள் பதிவுப் பயணத்துக்கு வாழ்த்துகள்.

தருமி said...

நெஜமாவா...? கேட்கவே நல்லா இருக்கே!

உண்மைத்தமிழன் சொன்னதுமாதிரி தமிழ்மண ஜோதியில் இணைந்துவிடுங்கள்...

வேளராசி said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி. சரவணன் நீங்கள் கூறியதை விசாரித்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.