Monday, March 24, 2008

யானையை விரட்டிய பெண்விவசாயி

கோவை அருகில் உள்ள வனங்களைஒட்டிய விவசாயநிலங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.அதற்காக மின்வேலி,பெரிய குழிகளை தோண்டுதல் போன்றவை செய்தும் பலனளிக்கவில்லை.ஆனால்சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியில் பெங்களூர் பானரகட்டா தேசிய வனவிலங்கு பூங்கா அருகில் உள்ள பெண் விவசாயி ஒரு எளியமுறையில் யானைகளை வரவிடாமல் தடுத்துஉள்ளார்.

கேழ்வரகு பயிர்செய்த தனதுவயலில் பயன்படுத்திய இன்ஜின்ஆயில் , மிளகாய்பொடி,புகையிலைத்தூள் மூன்றும் கலந்த கலவையில் கயிறுகளை நனைத்து வயல்வெளியை சுற்றிலும் கட்டினார்.காட்டிலிருந்து வந்த யானைகள் இந்தவாசனையை மோப்பம் பிடித்தவுடன் திரும்பிப் போய்விட்டன

என்கிறார்.ஜிம்பாவே நாட்டு விவசாயிகள் இந்தமுறையை பயன்படுத்தித்தான் வெற்றி கண்டுள்ளனர் என்கிறாரிவர்.

3 comments:

kuppusamy said...

இது செய்தியில் பாரத்தேன் இங்குள்ள மக்களிடம் அது போன்று செய்து பார்க்கச் சொல்ல வேண்டும். நன்று.மறொன்று பனங்கொட்டைகளை விவசாய நிலங்களின் சுற்றிலும் ஐந்து அடி வித்தியாசத்தில் போட்டு முழைக்க வைத்தால் வருங்காலத்தில் யானைகள் உள்ளே வரமுடியாது. பனை மரங்கள் அரண் போன்று அமைந்து விடும்.

Anonymous said...

மனுசங்க அதுங்க வாழற இடத்தை ஆக்கிரமிச்சுட்டோம். அதுங்க எங்கதான் போகும்.

வேளராசி said...

யானைகளுக்கு தங்களுடைய வழித்தடங்களை பற்றிய மரபு சார்ந்த நுண்அறிவு உண்டு.அந்த Elephant corridorஐ மறித்து நாம் டீ எஸ்டேட்களை,தொழிற்சாலைகளை,வீடுகளை கட்டும்போது அவை குழம்பிப் போய் ஊருக்குள் வந்து விடுகின்றன.மேலும் உணவிற்கும்,உறைவிடத்திற்கும் ஆதாரமான மழைக்காடுகளை அழிப்பதால் அவை இரைதேடி வயல்வெளிகளுக்கு வருகின்றன.