Saturday, November 15, 2008

தீராநதி மற்றும் கோவை ஓசை - ஒரு நேர்காணல்

கோவையில் செயல்பட்டுவரும் '' ஓசை'' அமைப்பு வனங்கள் மற்றும் வன உயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.இவர்கள் வருடந்தோறும் நடத்தும் ''கானுயிர் புகைப்படக் கண்காட்சி '' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.http://maravalam.blogspot.com/2008_09_01_archive.html

தீராநதி இதழில் திரு.காளிதாஸ் ( ஓசை ) அவர்களது பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

கேள்வி:மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய உங்களது பார்வை ?





உலகில் உயர்ந்த மலை எனக்கேட்டால் இமயமலை எனக்கூறுகிறோம்.ஆனால் இமயமலையை விட சில லட்சம் ஆண்டுகள் முன்பே மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என மண்ணியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண்,அங்கிருக்கின்ற இலை,தழைகளால் உருவாகின்ற மண்.இந்த சோலைக்காடுகளைத்தான் வள்ளுவர் '' அணி நிழற்காடு '' எனக்கூறி இருப்பார் என்று தோன்றுகிறது.சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும்.சூரியஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டு பகுதியில் இலைதலைகள் கீழே விழுந்து பறவை,விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகின்றது.

ஒரு அரை இன்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆனால்மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளில் அடுக்கடுக்கான அந்த மண்படிவுகள் இருக்கின்றன.அவை அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன.இவை உணர்த்துகின்ற இன்னொரு உண்மை,இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பதுதான்.காடு வளர்ப்பு பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம்.வெறும் மரங்கள் மட்டுமே காடுகள் ஆகிவிட முடியாது.சோலைக்காடுகள் என்பது அங்குள்ள நுண்ணுயிர்,பறவைகள்,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் பல வளமைகளை உள்ளடக்கியது.இதை நம்மால் உருவாக்க முடியாது,ஆனால் காப்பாற்றமுடியும். ( தொடரும் )












Sunday, November 2, 2008

கிராமக் குழந்தைகள் நூலகம்




நூலகங்கள் காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம் கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் எனும் அமைப்பால் தரப்பட்டிருக்கிறது!ஆம்!எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களை உருவாக்கும் பணியாக....!இவர்களின் சிறு கோரிக்கையாக மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த அளவு நூல்களை தாருங்கள், புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு இயன்றளவு உதவுங்கள் என்பதுதான்!இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!



கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வழியில் காரமடை எனும் ஊரில் உள்ளது அடையாளம் எனும் அமைப்பு.தன்னார்வத்தோடு செயல்படும் பலரது முயற்சியால் பெரியநாய்க்கன் பாளையம் எனும் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த 1400 குழந்தைகள் அவர்களே நிர்வகிக்கும் நூலகமாக


ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த அமைப்பின் சிறப்பம்சம் பணமாக வரும் உதவிகளை ஏற்பதில்லை என்பதுதான்.அதற்கு பதிலாக நூல்நிலையங்களுக்கு பணத்தை அனுப்பச்சொல்லி அங்கிருந்து தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.


அவர்களது தொடர்பு முகவரி


திரு.தண்டபாணி. அலைபேசிஎண் 98423 51324


திருமதி.அம்சவேணி. அலைபேசிஎண் 98421 51323


முகவரி


அடையாளம் அமைப்பு


2 / 563,பெத்தட்டாபுரம்,


காரமடை அஞ்சல்


கோயம்புத்தூர் 641 104.

நன்றி திரு.ஆயில்யன் அவர்களுக்கு.