1990 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் உதயமூர்த்தி அவர்கள்.தன்னம்பிக்கை பற்றிய அவரது புத்தகங்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.எம்.ஜி.ஆர்,கலைஞர் இருவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தாலும் அதைவைத்து தனக்கென ஆதாயம் தேடிக்கொண்டதில்லை.1988 ல் இவரால் துவங்கப்பட்ட '' மக்கள் சக்தி இயக்கம் '' நதிகள் இணைப்பை வலியுறுத்தி 1991 ல் நடத்திய நடைபயணம் வரலாறு அறிந்த விஷயம்.
அவரது கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் இளைஞர் குழு ஒன்று மக்கள் சக்தி இயக்கத்தையும்,மாத இதழான '' நம்பு தம்பி நம்மால் முடியும் '' புத்தகத்தையும் புதிய பொலிவுடன் கிராமங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவோர் அணுக முகவரி;
மக்கள் சக்தி இயக்கம்,திருவான்மியூர்,சென்னை.
044-24421810.www.makkalsakthi.org
Saturday, June 21, 2008
M.S .உதயமூர்த்தி
Wednesday, June 11, 2008
பசுமை மனிதன்
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எர்த் மேட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு சுற்றுசூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் '' சுற்றுச்சூழல் போராளி '' ( Eco Warrior ) எனும் விருதினை வழங்கிவருகிறது.
கோவையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் யோகநாதன்.பள்ளியில் படிக்கும் பொழுது இயற்கையை ரசிக்க ஆரம்பித்த இவர் 1980ஆம் ஆண்டு முதல் மரங்களை நடும்பணியை துவக்கி இதுவரை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை செய்துள்ளார்.
பள்ளி மாணவ மாணவியரிடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இதுவரை 1687 பள்ளிகளில் '' ஸ்லைடு ஷோ '' நடத்தியுள்ளார்.மரம் வளர்வது எப்படி?காற்றும் தண்ணீரும் உருவாகும் முறை , அசுத்தக் காற்றை மரங்கள் தூய்மைப்படுத்தும் விதம் போன்றவை விஞ்ஞானபூர்வமாக இந்தகாட்சியில் விளக்கப்படுகின்றன.
இதன் பயனாக 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.மேலும் இவரது பேருந்தில் பயணம் செய்யும் மாணவ மாணவியரை பசுமை நேசிப்பாளராக மனம் மாற்றியுள்ளார்.
எனவே இவரது சேவையை பாராட்டி எர்த் மேட்டர்ஸ் அமைப்பு கடந்த 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி அவர்கள்மூலம் எக்கோவாரியர் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நபர்களில் கண்டக்டர் யோகநாதன் வரிசையில் இந்திநடிகர்,பிரபல மாடலிங் ஜான்ஆபிரஹாமும் ஒருவர்.
Thursday, May 29, 2008
சிவில் சர்வீஸ் தேர்வுகள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சைதை.துரைசாமி அவர்கள் நடத்தும் மனிதநேயப்பேரவை சிவில்சர்வீஸ் எழுதவிரும்பும் மாணவர்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கவுள்ளது. 8 மாதம் நடக்கவுள்ள இந்த முகாமிற்கு தேர்ந்தெடுக்கபடும் நபர்களுக்கு உணவு,உறைவிடம்,பயிற்சிநூல்கள்,சீருடை,பயணசெலவுகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது கூடுதல் செய்தி.ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமாக.மேலும் விபரம் அறிய www.manidhanaeyam.com செல்க.
Wednesday, April 23, 2008
இதய நோய்க்கு தமிழர்களின் மருந்து
இதய நோயினாலும் மாரடைப்பு ஏற்பட்டு ரத்தம் திடீர் என்று உறைவதாலும் பலர் திடீர் என மரணத்தை தழுவுகிறார்கள்.இந்த விபரீதத்தை தடுக்கும் அதிஅற்புத மருந்து ஹெபாரின் என்பது.இந்த மருந்து உயர்ரக விலங்குகளின் சிறுகுடல்,நுரையீரலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதன்மூலம் கிடைக்கும் மருந்தின் அளவு மிகக்குறைவானது என்பதால் அதன்விலையும் மிக அதிகமாகவே உள்ளது. 1 மில்லிகிராம் ஹெபாரின் விலை ரூ 7,600 ல் இருந்து 33 ஆயிரம் வரை தரத்துக்கு ஏற்ப உள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலைகூட ரூபாய் 1,100 தான்.ஆனால் ஒரு கிராம் ஹெபாரின் விலை உத்தேசமாக இரண்டரைலட்சம் ஆகும்.
மனிதனின் மகத்தான உயிரை மாரடைப்பு காலங்களில் காப்பாற்றக்கூடிய இந்த மருந்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்உயிரியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 10 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்து கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகளில் இருந்து தயாரிக்கமுடியும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
திறந்த இருதய அறுவைசிகிச்சை,இதய வால்வு மாற்று சிகிச்சை மற்றும் மாரடைப்பு காலங்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும் ஹெபாரினை பயன்படுத்தி வருகிறார்கள்.நமது விஞ்ஞானிகள் இந்த புதிய மருந்தை ஆட்டின் ரத்தத்திலும்,மனித ரத்தத்திலும் செலுத்தி பரிசோதித்து பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
உலக அளவில் ஹெபாரினை உற்பத்திசெய்யும் இத்தாலியை சேர்ந்த ஓபாக்ரின் என்ற மருந்து நிறுவனத்திற்கே அனுப்பி தரத்தினை உறுதி செய்திருக்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் உலகில்உள்ள இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பர் எனக்கூறியுள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.
மீனவப்பொருளாதாரம் : இதுவரை உணவிற்காகவும், இறால் பண்ணைகளில் இறால் உணவிற்காகவும் பயன்பட்ட சிப்பிகள் வணிகரீதியாக பயன்படும்பொழுது மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்பது கண்கூடு.
இவர்கள் கண்டுபிடித்த மருந்தினில் செல்களின் பெருக்கத்தை குறைக்கும் பண்பு இருப்பதால் பற்றுநோய் மற்றும் H I V க்கு மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என ஆராய்ச்சி செய்ய உள்ளார்கள்.இவர்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோமாக.
Sunday, April 20, 2008
முதல் இந்தியர் - மதுரைக்காரர்
முதல் இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்விகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து விடை தேடும் முயற்சியில் இறங்கின.இந்தியாவில் மனிதர்கள் இடம்பெயர்ந்தது 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.அப்படி இடம் பெயர்ந்தவர்கள் M130 என்ற மரபணுக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர்களது ஆராய்ச்சியில் மதுரையில் இருந்து 50 கி.மி.தொலைவில் மேற்க்குதொடர்ச்சி மலைப்புகுதியில் அமைந்துள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறியகிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள 13 பேரின் D N A க்களை பரிசோதனை செய்துபார்த்ததில் அவர்கள் M 130 என்ற மரபணுக்கள் உடையவர்களாய் இருப்பதை வைத்து அவர்களின் மூதாதையர்களே முதல்இந்தியர்களாக இருக்கக்கூடும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் M 130 என்ற மரபணுவை விட பழமையான மரபணுவை கொண்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே இந்த மரபணுவை கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் தெற்காசியாவில் இருந்துதான் உலகின் மற்ற பகுதிகளுக்கு மக்கள் குடியேற்றம் நடந்தது என ஏற்கனவே மரபியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 16, 2008
யோகாசன ஆசிரியர் பயிற்சி
மதம் சார்ந்த விஷயம் அல்ல,உடல் நலன் சம்பந்தப்பட்டது என்பதால் இப்பொழுது யோகாசனபயிற்சிக்கு நல்ல வரவேற்பிருக்கிறது.
சுவாமி சச்சிதானந்தா அவர்களால் நிறுவப்பட்ட இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட் கோவையில் யோகாசன ஆசிரியர் பயிற்சி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஒருமாத பயிற்சி முகாமில் ஆசனம்,மூச்சுபயிற்சி,உடலை ஓய்வாக வைத்திருக்கும் முறைகள்,உடற்கூறு பற்றிய விளக்கங்கள்,உளவியல் என பல்வேறு விஷயங்களை போதிக்கின்றனர்.
இந்த பயிற்சிக்குபின் அவர்களுக்கு கல்வி நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,உடற்பயிற்சிகூடங்கள்,கார்பரேட் கம்பெனிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனவே எந்த ஒரு சமயத்தை சார்ந்தவராக இருப்பினும் தயக்கமின்றி இதனை கற்று பயன்பெறலாம்.மேலும்அறிய 0422- 2556770 , 2542651 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, April 15, 2008
உலக புத்தக தினம்
வரும் ஏப்ரல் 23 ந்தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள்.ஷேக்ஸ்பியர் மற்றும் டான் க்விக் ஷாட் பிறந்ததினமான அன்று புத்தகங்களை வாங்கி நம்அறிவை விசாலமாக்குவதுடன் எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் கௌரவிப்போமாக