Sunday, April 20, 2008

முதல் இந்தியர் - மதுரைக்காரர்

முதல் இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்விகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து விடை தேடும் முயற்சியில் இறங்கின.இந்தியாவில் மனிதர்கள் இடம்பெயர்ந்தது 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.அப்படி இடம் பெயர்ந்தவர்கள் M130 என்ற மரபணுக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர்களது ஆராய்ச்சியில் மதுரையில் இருந்து 50 கி.மி.தொலைவில் மேற்க்குதொடர்ச்சி மலைப்புகுதியில் அமைந்துள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறியகிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள 13 பேரின் D N A க்களை பரிசோதனை செய்துபார்த்ததில் அவர்கள் M 130 என்ற மரபணுக்கள் உடையவர்களாய் இருப்பதை வைத்து அவர்களின் மூதாதையர்களே முதல்இந்தியர்களாக இருக்கக்கூடும் என கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் M 130 என்ற மரபணுவை விட பழமையான மரபணுவை கொண்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே இந்த மரபணுவை கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் தெற்காசியாவில் இருந்துதான் உலகின் மற்ற பகுதிகளுக்கு மக்கள் குடியேற்றம் நடந்தது என ஏற்கனவே மரபியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

அகரம் அமுதா said...

அருமையாக செய்திகளை வழங்கியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.

க. சந்தானம் said...

அன்பு வேளராசி , அவர்களுக்கு !
தாங்கள் 20/4/08 ல் எழுதிய முதல் இந்தியர் - மதுரைக்காரர் ' படித்தேன். ஜோதிமாணிக்கம் என்றதும் நான் யாருடைய பெயரோ என நினைத்தேன். மிக நன்றாக இருந்தது.