Sunday, August 17, 2008

நான் ரசித்த நிழல்நடனம்



நன்றி திரு.பிரேம்ஜி

Thursday, August 14, 2008

சுதந்திர தினம்

சுதந்திரதினம்-டிவி இல்லாமல்August 13, 2008 – 9:11 pm
நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.
இமையம் யூத் அஸோஷியேஷன் இணைந்த கரங்கள் நற்பணி இயக்கம் இளைய ஆணிகள் பசுமை பாரதம் 18-f, ECM lay out, SKC Road., Erode Ph. 9842771700, 9865916970. அன்புடையீர், நாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும் அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.
இந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.
இதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்தது நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்
அன்புடன்
கிருஷ்ணன்செயலாளர்இமையம்
பிறநிறுவனங்களுக்காகவும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
கட்டுரை குறித்த கருத்துக்களை jeyamohan.writer@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

Tuesday, August 5, 2008

பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மாமன்னன் இராசராசன் பரிசு - 2008 விருதுத்தொகை :ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் மற்றும் சான்றிதழ்.# புதினம்,கவிதை,நாடகம்,கலையழகு மிளிரும் உரைநடை ஆகியன பரிசுக்குரியன. #01.07.2007 முதல் 30.06.2008 நாளுக்கு முன் வெளியீடானவை.#நூலின் ஆசிரியர் எந்நாட்டவராகவும் அமையலாம்.#எவர் வேண்டுமானாலும்,குறித்த பரிந்துரைப்படிவங்களில் தங்கள் முன்மொழிவை அனுப்பிவைக்கலாம்.படிவங்களைப் பதிவாளர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்-613 010 என்ற முகவரிக்கு ரூ 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி உறை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.#படிவம் கிடைக்காவிடில் பரிந்துரையாளரின் முகவரி,பரிந்துரைத்த ஆசிரியரின் முகவரி,இலக்கிய வாழ்வுப்பணி பற்றிய குறிப்பு,நூற்பெயர்,நூற்சிறப்பு,இலக்கிய உலகில் நூலின் தகவு,பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாயின் அதன் விவரம்,ஆசிரியரின் பிறநால்கள் முதலிய சிறப்புச்செய்திகளைக் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கலாம்.# பரிந்துரை அனுப்பும் நிறை நாள் : 17.9.2008. எனவே நண்பர்கள் அனைவருக்கும் இத்தகவலை பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, August 2, 2008

தீரன் சின்னமலை

இன்று ஆடிப்பெருக்கு.நதிகளில் வெள்ளம் 18 படிகளை தொட்டுச்செல்லும் நாள்.இந்த நாளில் நினைவுகூறப்படுவர் தீரன் சின்னமலை.ஆங்கிலேயர்கள் கொங்குநாட்டில் காலூன்றி வரிப்பணம் வசூல்செய்து கொண்டுசெல்லும்போது எங்கள் பணத்தை உனக்கு எதற்கு கொடுக்கவேண்டும் ? என வசூல்செய்த அனைத்தையும் பறிமுதல் செய்தார்.உயரதிகாரிகள் கேட்டால் என்ன சொல்வது? என வரிவசூல் செய்தவர் கேட்டபோது '' சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை பிடுங்கிக்கொண்டான் என்று போய்ச்சொல் '' என்று அனுப்பிவைத்தார். 1801 ன்றாம் ஆண்டு தொடங்கி இவர் நடத்திய மூன்று போர்கள் ஆங்கிலேயர்களால் மறக்கமுடியாதவை.மருது சகோதரர்களுடன் நட்புகொண்டிருந்தார்.குறுநிலமன்னர்கள் படைகளை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் போராடியபோது இவர் முதன்முதலாக மக்களையும் வெள்ளையர்களுக்கு எதிராக போராடவைத்தார்.இவரது கொரில்லா போர்முறையை தாக்குபிடிக்கமுடியாத கிழக்கிந்திய கம்பெனி தந்திரமாக இவரது சமையல்காரனை விலைக்குவாங்கி எந்தநேரமும் ஆயுதத்தோடு இருப்பவரை உணவு உண்ணும்போது நிராயுதபாணியாக இருக்குமாறு செய்து அதன்பின் கைதுசெய்தது.அடிபணிந்து போகமாட்டேன் என்று கூறியதால் ஒரு ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்களால் வீரமரணம் அடைந்தார்.

குறிப்பு: இவரது சிலை கிண்டியில் உள்ளது.

Tuesday, July 29, 2008

பாடம் கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

நாட்டில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் நாம் குழந்தைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்வோமாக.

Friday, July 11, 2008

கற்கை நன்றே கற்கை நன்றே

கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி திரு.லோகநாதன்.இவர் காலையில் இருந்து மதியம் 1 மணி வரை ஒரு பட்டறையில் வெல்டிங் மற்றும் கேஸ்கட்டிங் வேலைகளை செய்கிறார்.பின்பு மதியஉணவு நேரமான 1 மணி முதல் 2 மணி வரைஉள்ள நேரத்தில் 15 நிமிடத்தில் உணவு அருந்திவிட்டு மீதமுள்ள 45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள்,நிறுவனங்களில் கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறார்.அதன்பின் மதியம் 2 மணிமுதல் 6 மணிவரை வெல்டிங் வேலையை முடித்தபின் மாலை 6 மணிக்கு மேல் பல வீடுகளுக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்கிறார்.வெல்டிங்வேலையில் மாதம் ஆறாயிரம் வரை சம்பளம் வாங்கும் இவர் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டு கழிவரையை சுத்தம் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைக்கிறார்.

சமீபத்தில் இவர் தனது சேமிப்பில் இருந்த பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை பெற்றோரை இழந்து அரசு காப்பகத்தில் தங்கிப்படிக்கும் ஆதரவற்ற மாணவியர்க்கு புத்தகங்கள் வாங்க உதவியிருக்கிறார்.

இவரை பற்றிக் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்த பாடல்

ஈன்று புறம்தருதல் என்தலைக்கடனே அவனை

சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே

இவர் தந்தையுமானவர்

Thursday, July 10, 2008

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

திரு.மஞ்சூர் ராசா அவர்களது முயற்சியால் கோவையில் வலைபதிவர் சந்திப்பு வரும் ஜூலை 13ஆம்தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.வரும் அன்பர்களது எண்ணிக்கையை பொருத்து இடத்தை முடிவுசெய்யலாம் எண்ணியுள்ளனர்.எனவே கோவையை சுற்றியுள்ள அன்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
திரு.மஞ்சூர்ராசா 94424 61246
திரு.ஓசைசெல்லா 99946 22423
திரு.சஞ்சய் 98428 77208