Sunday, November 2, 2008

கிராமக் குழந்தைகள் நூலகம்




நூலகங்கள் காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம் கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் எனும் அமைப்பால் தரப்பட்டிருக்கிறது!ஆம்!எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களை உருவாக்கும் பணியாக....!இவர்களின் சிறு கோரிக்கையாக மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த அளவு நூல்களை தாருங்கள், புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு இயன்றளவு உதவுங்கள் என்பதுதான்!இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!



கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வழியில் காரமடை எனும் ஊரில் உள்ளது அடையாளம் எனும் அமைப்பு.தன்னார்வத்தோடு செயல்படும் பலரது முயற்சியால் பெரியநாய்க்கன் பாளையம் எனும் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த 1400 குழந்தைகள் அவர்களே நிர்வகிக்கும் நூலகமாக


ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த அமைப்பின் சிறப்பம்சம் பணமாக வரும் உதவிகளை ஏற்பதில்லை என்பதுதான்.அதற்கு பதிலாக நூல்நிலையங்களுக்கு பணத்தை அனுப்பச்சொல்லி அங்கிருந்து தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.


அவர்களது தொடர்பு முகவரி


திரு.தண்டபாணி. அலைபேசிஎண் 98423 51324


திருமதி.அம்சவேணி. அலைபேசிஎண் 98421 51323


முகவரி


அடையாளம் அமைப்பு


2 / 563,பெத்தட்டாபுரம்,


காரமடை அஞ்சல்


கோயம்புத்தூர் 641 104.

நன்றி திரு.ஆயில்யன் அவர்களுக்கு.




8 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்தி...

ADAIYAALAM.CBE said...

Respected collegue.
Very happy in reading the information about the Children Reading Movement guided by ADAIYAALAM, in your blog.

We are trying to link likeminded people working or thinking abut quality education.

In that way we are happy to see this.

We request you to accomodate yourself in this Team- sharing energy for quality eduation for all.

with regards
v.dhandapani

பழமைபேசி said...

நல்ல தகவல். ஊருக்கு விடுமுறைக்கு வர்ற யோசனை இருக்குங்க.... அவசியம் அவிங்களத் தொடர்பு கொள்ளுறேன்.

வேளராசி said...

வருகைக்கு நன்றி ஞானசேகரன் அவர்களே.

வேளராசி said...

மணி ஊருக்கு வரும்போது முதலிலேயே தகவல் கொடுங்க.

வேளராசி said...

தண்டபாணி நேரில் இதுபற்றி பேசுவோம்.

ஆயில்யன் said...

அருமை நண்பரே!

தற்செயலாய் கண்ணில் பட்டு கவனத்தை கவர்ந்த விசயம்!

நீங்கள் தொடர்ந்து சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கையில் மகிழ்ச்சியளிக்கிறது!

நன்றிகளுடன்.....!

rahini said...

அருமையான ஓரு பூங்காவில் கால் பதித்துள்ளேன்
ஒவ்வொரு விடயமாக வாசித்து பதில் போடுகின்றேன்.


அன்பு நெஞ்சங்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் லண்டன் தமிழ் வானொலியில்
கவிதையில் பூத்திருக்கும் பாடல்கள் என்ற நிகழ்ச்சி தொகுத்துவளங்குகின்றேன்
நீங்களும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.http://www.firstaudio.info/
கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்
ராகினி.