Saturday, November 15, 2008

தீராநதி மற்றும் கோவை ஓசை - ஒரு நேர்காணல்

கோவையில் செயல்பட்டுவரும் '' ஓசை'' அமைப்பு வனங்கள் மற்றும் வன உயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.இவர்கள் வருடந்தோறும் நடத்தும் ''கானுயிர் புகைப்படக் கண்காட்சி '' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.http://maravalam.blogspot.com/2008_09_01_archive.html

தீராநதி இதழில் திரு.காளிதாஸ் ( ஓசை ) அவர்களது பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

கேள்வி:மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய உங்களது பார்வை ?





உலகில் உயர்ந்த மலை எனக்கேட்டால் இமயமலை எனக்கூறுகிறோம்.ஆனால் இமயமலையை விட சில லட்சம் ஆண்டுகள் முன்பே மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என மண்ணியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண்,அங்கிருக்கின்ற இலை,தழைகளால் உருவாகின்ற மண்.இந்த சோலைக்காடுகளைத்தான் வள்ளுவர் '' அணி நிழற்காடு '' எனக்கூறி இருப்பார் என்று தோன்றுகிறது.சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும்.சூரியஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டு பகுதியில் இலைதலைகள் கீழே விழுந்து பறவை,விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகின்றது.

ஒரு அரை இன்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆனால்மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளில் அடுக்கடுக்கான அந்த மண்படிவுகள் இருக்கின்றன.அவை அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன.இவை உணர்த்துகின்ற இன்னொரு உண்மை,இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பதுதான்.காடு வளர்ப்பு பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம்.வெறும் மரங்கள் மட்டுமே காடுகள் ஆகிவிட முடியாது.சோலைக்காடுகள் என்பது அங்குள்ள நுண்ணுயிர்,பறவைகள்,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் பல வளமைகளை உள்ளடக்கியது.இதை நம்மால் உருவாக்க முடியாது,ஆனால் காப்பாற்றமுடியும். ( தொடரும் )












2 comments:

Karthikeyan G said...

உங்கள் சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள்.. தொடரட்டும் உங்கள் நல்ல பணி. வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

தகவலுக்கு நன்றிங்க!