Friday, September 5, 2008

கல்வெட்டுகள் - வரலாற்றின் படிக்கட்டுகள்

வரலாறு என்பது ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல.அசைக்கமுடியாத அடிப்படை சான்றுகளை கொண்டு எழுதப்படுவது.அந்த அடிப்படை ஆதாரங்களே கல்வெட்டுகள்.

கி.பி.1000த்தில் தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்பதை நாம் கல்வெட்டுகள் மூலமாகத்தான் அறிந்தோம்.இதுபோல் தமிழகத்தில் பல்லாயிரம் ஊர்களின் வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாகத்தான் அறிந்தோம்.

லண்டனில் நடைபெற்ற பத்தூர்கோவில் நடராஜர் சிலைவழக்கில் நீதிபதி , கல்வெட்டு நிபுணர் திரு.நாகசாமி அவர்களிடம் புத்தூர் கோவிலின் காலம் என்ன? தமிழ்நாட்டு சிலைகளின் காலத்தை எவ்வாறு கணிக்கிறீர்கள்? அவை உண்மையான சான்றுகள் என எவ்வாறு நிரூபிப்பீர்கள்? என கேள்வி கேட்டார்.

அப்போது பத்தூர் கோவிலின் கல்வெட்டுகளை எடுத்துக்கூறி சிலைகளின் காலத்தைக்கணிக்கும் கல்வெட்டுகளின் தன்மையையும் எடுத்துக்கூறினார்.அந்த சான்றுகளைப் பார்த்துவிட்டு நடராஜர் சிலை கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்புக்கூறினார்.

இப்போது படிக்க இருப்பவையே 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள்.ஆனால் தொல்லியல்துறையில் கல்வெட்டுநிபுணத்துவம் பெற்றவர்களோ நான்குபேர் மட்டும்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் திருப்பணிக்காக அழிக்கப்பட்ட கல்வெட்டுகளோ ஏராளம். இன்றைய தலைமுறைக்கு நமது கலை தெரியாது, கட்டிடம் தெரியாது,கல்வெட்டு தெரியாது,வரலாறு தெரியாது.இப்படியிருந்தால் தமிழின் தொன்மையை,தமிழகத்தின் சிறப்பை,கலை மற்றும் கலாச்சாரத்தை,நாகரீகத்தை,பண்பாட்டை உலகத்திற்கு நாம் எவ்வாறு தெரியப்படுத்துவோம்? என வினவுகிறார் கல்வெட்டுநிபுணர் டாக்டர் திரு.ஆர்.நாகசாமி.

5 comments:

பழமைபேசி said...

நியாயமான கேள்வி! வளர்ச்சி என்கிற பெயரால் இறையாண்மை பழுதுபட்டுக் கொண்டு இருக்கிற இந்நேரத்தில், இந்தக் கேள்வி மிகவும் சரியானாதே!

வேளராசி said...

ஆட்சியாளர்கள் முயன்றால் இந்த துறையை செழுமைப்படுத்த முடியும் பழமைபேசி அவர்களே.

ஆயில்யன் said...

இருக்கும் சான்றுகளினை அழித்துவிட்டு இல்லாத எதையோ தேடி போய்க்கொண்டிருக்கிறோம்!

கோவில்கள் வரலாற்று சான்றுகளின் இருப்பிடங்கள் என்ற யதார்த்த தன்மையுடன் அணுக வேண்டியது அரசின் கடமை!

எத்தனையோ வளர்ச்சிகள் அறிவியல் ரீதியாக ஆனாலும் நம்மால் இன்னும் வரலாற்று சான்றுகளை பத்திரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை! ஆர்வமும் கொஞ்சமும் இல்லை!

jeevagv said...

இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் செய்வதற்கு ஆளில்லாமல் இருக்குது. ஆர்வமிருப்போர் தானாக முன்வந்து வேலைகளை கற்றுக்கொண்டால், அவற்றில் பாதியை நிறைவேற்றி விடலாம். அரசை நம்பி இருந்து மட்டும் பயனில்லை. அரசு முட்டுக்கட்டைகளை போடாமல் இருந்தால் போதும். ஊக்கம் தந்தால், இன்னும் விரைவிலேயே முடித்திடலாம்.

R.DEVARAJAN said...

அன்பரே !

சட்றொப்ப 13/14 ஆண்டுகளுக்குமுன் இலண்டன் நகரில் நடைபெற்ற அவ்வழக்கு ‘சிவபுரம்’ ஊரைச்சேர்ந்த ஆடவல்லானின் ஐம்பொன் திருமேனி என்பதாக எனக்கு நினைவு.


தேவ்