Saturday, August 2, 2008

தீரன் சின்னமலை

இன்று ஆடிப்பெருக்கு.நதிகளில் வெள்ளம் 18 படிகளை தொட்டுச்செல்லும் நாள்.இந்த நாளில் நினைவுகூறப்படுவர் தீரன் சின்னமலை.ஆங்கிலேயர்கள் கொங்குநாட்டில் காலூன்றி வரிப்பணம் வசூல்செய்து கொண்டுசெல்லும்போது எங்கள் பணத்தை உனக்கு எதற்கு கொடுக்கவேண்டும் ? என வசூல்செய்த அனைத்தையும் பறிமுதல் செய்தார்.உயரதிகாரிகள் கேட்டால் என்ன சொல்வது? என வரிவசூல் செய்தவர் கேட்டபோது '' சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை பிடுங்கிக்கொண்டான் என்று போய்ச்சொல் '' என்று அனுப்பிவைத்தார். 1801 ன்றாம் ஆண்டு தொடங்கி இவர் நடத்திய மூன்று போர்கள் ஆங்கிலேயர்களால் மறக்கமுடியாதவை.மருது சகோதரர்களுடன் நட்புகொண்டிருந்தார்.குறுநிலமன்னர்கள் படைகளை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் போராடியபோது இவர் முதன்முதலாக மக்களையும் வெள்ளையர்களுக்கு எதிராக போராடவைத்தார்.இவரது கொரில்லா போர்முறையை தாக்குபிடிக்கமுடியாத கிழக்கிந்திய கம்பெனி தந்திரமாக இவரது சமையல்காரனை விலைக்குவாங்கி எந்தநேரமும் ஆயுதத்தோடு இருப்பவரை உணவு உண்ணும்போது நிராயுதபாணியாக இருக்குமாறு செய்து அதன்பின் கைதுசெய்தது.அடிபணிந்து போகமாட்டேன் என்று கூறியதால் ஒரு ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்களால் வீரமரணம் அடைந்தார்.

குறிப்பு: இவரது சிலை கிண்டியில் உள்ளது.

2 comments:

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அவரோட நினைவுநாள் என்று சொல்லுங்க !

Anonymous said...

சங்ககிரி கூடுதுறைக்குப்பக்கத்தில தான இருக்கு. ஈரோட்டில ஹாஸ்டல்ல இருந்தப்ப ரூம் மேட்ஸ் 2 பேர் சங்ககிரில வேலை பாத்திட்டு இருந்தாங்க.