கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி திரு.லோகநாதன்.இவர் காலையில் இருந்து மதியம் 1 மணி வரை ஒரு பட்டறையில் வெல்டிங் மற்றும் கேஸ்கட்டிங் வேலைகளை செய்கிறார்.பின்பு மதியஉணவு நேரமான 1 மணி முதல் 2 மணி வரைஉள்ள நேரத்தில் 15 நிமிடத்தில் உணவு அருந்திவிட்டு மீதமுள்ள 45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள்,நிறுவனங்களில் கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறார்.அதன்பின் மதியம் 2 மணிமுதல் 6 மணிவரை வெல்டிங் வேலையை முடித்தபின் மாலை 6 மணிக்கு மேல் பல வீடுகளுக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்கிறார்.வெல்டிங்வேலையில் மாதம் ஆறாயிரம் வரை சம்பளம் வாங்கும் இவர் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டு கழிவரையை சுத்தம் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைக்கிறார்.
சமீபத்தில் இவர் தனது சேமிப்பில் இருந்த பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை பெற்றோரை இழந்து அரசு காப்பகத்தில் தங்கிப்படிக்கும் ஆதரவற்ற மாணவியர்க்கு புத்தகங்கள் வாங்க உதவியிருக்கிறார்.
இவரை பற்றிக் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்த பாடல்
ஈன்று புறம்தருதல் என்தலைக்கடனே அவனை
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே
இவர் தந்தையுமானவர்
Friday, July 11, 2008
கற்கை நன்றே கற்கை நன்றே
Labels:
கல்வி
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நல்ல பதிவு. பாரட்டுக்கள்.
அவரது படம் கிடைத்தால் போடவும்.
தலைபபைச் சரி செய்யவும்.
அவர் நெஞ்சம் நிறைவு பெற்று வாழ வாழ்த்துக்கள்!
(பி.கு: கற்கை நன்றே என்றல்லவா இருக்க வேண்டும்! ற்-க்கு அப்புறம் மெய்யெழுத்து வாரா)
இருவரது வருகைக்கும்,பிழையினை சுட்டி காட்டியதற்கும் நன்றி.
இதுபோன்ற நல்ல உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
வேலை இடத்துக்கு இப்பதான் வந்தனுங்க. உங்க பதிவெல்லாம் பாத்துட்டு பின்னூட்டம் போடணும். ஊர்ல எல்லாம் சௌக்கியந்தானுங்களே?!
திரு லோகநாதனை மனமாற பாராட்டுகிறேன். அவரைப்பற்றி அறியத்தந்த தங்களையும் தான். வாழ்த்துகள்.
தாயுமானவரை பற்றி கேட்டு இருக்கிறோம்.தந்தையுமானவரப்பற்றி செய்தி கேட்டு வாழ்கா அவர் பல்லாண்டு
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
பாரட்டுக்கள்.
அவரைப்பற்றி வெளிச்சமிட்டு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு.
பாரட்டுக்கள்.
அவரைப்பற்றி வெளிச்சமிட்டு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு.
// ஜீவா (Jeeva Venkataraman) said...
அவர் நெஞ்சம் நிறைவு பெற்று வாழ வாழ்த்துக்கள்!
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....
அவர் நெஞ்சம் நிறைவு பெற்று வாழ வாழ்த்துக்கள்!
குடத்தில் இட்ட விளக்காக விளங்கும் லோகநாதன் போன்ற நல்ல மனிதர்களை அங்கீகரித்து பாராட்டும் விதமாய் பதிவிட்ட 'வேளராசி' உண்மையிலேயே 'நல்லராசி' தான்.
நேரம் கிடைக்கும்போது நம்ம வீட்டுக்கும் வாங்களேன் :))
www.bala-win-paarvai.blogspot.com
நல்ல பதிவு. இவர் சமுதாயத்துக்கு ஒரு முன் உதாரணம்.
//குடத்தில் இட்ட விளக்காக விளங்கும் லோகநாதன் போன்ற நல்ல மனிதர்களை அங்கீகரித்து பாராட்டும் விதமாய் பதிவிட்ட 'வேளராசி' உண்மையிலேயே 'நல்லராசி' தான்.//
உண்மை!
இவர் எங்கள் பகுதியில் இருப்பது எங்கள் ராசி!
Post a Comment