1990 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் உதயமூர்த்தி அவர்கள்.தன்னம்பிக்கை பற்றிய அவரது புத்தகங்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.எம்.ஜி.ஆர்,கலைஞர் இருவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தாலும் அதைவைத்து தனக்கென ஆதாயம் தேடிக்கொண்டதில்லை.1988 ல் இவரால் துவங்கப்பட்ட '' மக்கள் சக்தி இயக்கம் '' நதிகள் இணைப்பை வலியுறுத்தி 1991 ல் நடத்திய நடைபயணம் வரலாறு அறிந்த விஷயம்.
அவரது கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் இளைஞர் குழு ஒன்று மக்கள் சக்தி இயக்கத்தையும்,மாத இதழான '' நம்பு தம்பி நம்மால் முடியும் '' புத்தகத்தையும் புதிய பொலிவுடன் கிராமங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவோர் அணுக முகவரி;
மக்கள் சக்தி இயக்கம்,திருவான்மியூர்,சென்னை.
044-24421810.www.makkalsakthi.org
Saturday, June 21, 2008
M.S .உதயமூர்த்தி
Labels:
சமுதாயம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பரே,
வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளன. எதிர்மறை எண்ணங்கள் மனத்தில் தோன்றாதிருக்க இத்தகைய செய்திகள் இன்று மிகவும் தேவை. nallaseythi.blogspot கூட இது போன்று தான் உள்ளது.நான் இணைய தளத்திற்குப் புதியவன். மெல்ல மெல்லக் கற்று வருகிறேன்.
பணிவுடன்,
தேவராசன்
சென்னை
rdev97@gmail.com
வேளராசி அவர்களே,
வித்தியாசமான பெயர். வித்தியாசமான வலைப்பூ. நல்லா இருக்கு. தொடருங்கள்.
அனுஜன்யா
Post a Comment