Wednesday, June 11, 2008

பசுமை மனிதன்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எர்த் மேட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு சுற்றுசூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் '' சுற்றுச்சூழல் போராளி '' ( Eco Warrior ) எனும் விருதினை வழங்கிவருகிறது.

கோவையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் யோகநாதன்.பள்ளியில் படிக்கும் பொழுது இயற்கையை ரசிக்க ஆரம்பித்த இவர் 1980ஆம் ஆண்டு முதல் மரங்களை நடும்பணியை துவக்கி இதுவரை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை செய்துள்ளார்.

பள்ளி மாணவ மாணவியரிடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இதுவரை 1687 பள்ளிகளில் '' ஸ்லைடு ஷோ '' நடத்தியுள்ளார்.மரம் வளர்வது எப்படி?காற்றும் தண்ணீரும் உருவாகும் முறை , அசுத்தக் காற்றை மரங்கள் தூய்மைப்படுத்தும் விதம் போன்றவை விஞ்ஞானபூர்வமாக இந்தகாட்சியில் விளக்கப்படுகின்றன.

இதன் பயனாக 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.மேலும் இவரது பேருந்தில் பயணம் செய்யும் மாணவ மாணவியரை பசுமை நேசிப்பாளராக மனம் மாற்றியுள்ளார்.

எனவே இவரது சேவையை பாராட்டி எர்த் மேட்டர்ஸ் அமைப்பு கடந்த 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி அவர்கள்மூலம் எக்கோவாரியர் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நபர்களில் கண்டக்டர் யோகநாதன் வரிசையில் இந்திநடிகர்,பிரபல மாடலிங் ஜான்ஆபிரஹாமும் ஒருவர்.

6 comments:

சிறில் அலெக்ஸ் said...

சூப்பர் செய்தி. இவர்தான் நிஜ ஹீரோ. இவரைத்தான் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியிலும் பொங்கல் நாளிலும் 7மணி செய்தியிலும் காண்பிக்கவேண்டும்.

சாதாரண பின்னணியுல்ள சாதனையாளர்களை நம் ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நல்லவர்களை உதாரணப்படுத்தி அடையாளம் காண்பித்தால் பிறருக்கும் இதைப்போல நாமும் இருக்கலாமே எனத் தோன்றலாம்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

வேளராசி! ரொம்ப நல்ல விஷயம்.

வேளராசி said...

நண்பர் சிறில் அலெக்ஸ்,பிரேம்ஜி இருவரது வருகைக்கும் நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி...

சும்மாவா..? எங்க ஊர்க்காரர்னா இப்டி தான் இருப்பாங்க....

அப்புறம், பலராம்புரம் போக பஸ் நம்பர் கேட்டிருந்திங்க, ரொம்ப நாளிக்கு முன்னாடி.. பலராமபுரமே தெர்யாததால நான் பதில் சொல்லாம விட்டுட்டேன்... அந்த ஊர் திருவனந்தபுரத்தில் இருந்து, நாகர்கோவில் போற வழியில இருக்கு. எனவே, நீங்க நம்பர் எல்லாம் பார்க்காம, நாகர்கோவில் போற எந்த பஸ் ஏறினாலும் மதி.

none said...

வணக்கம் வேளராசி,
பதிவுகள் ஆக்கபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

கல்கிதாசன்

கோவை விஜய் said...

nice article about mr,Yoganathan.

please vist my blog pugaippezhai.blogspot.com

http://pugaippezhai.blogspot.com
1.'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவை தமிழன் அன்பர் ம.யோகநாதன் அவர்களது வாரந்திர பணிகள்:

கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வெற்றிப் பேரிகை

அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறை...

"என்னை வளர்த்த மனிதா, உன்னை அழி(ளி)ப்பேன் எளிதாய்"...
கடுப்படிக்கும் கச்சா எண்ணெய்! மர்ம-முடிச்சு அவிழ்க...

t.vijay
coimbatore