Wednesday, February 27, 2008

கண்தானம் - புதிய பார்வை

நம்மில் பெரும்பாலோர் கண்தானம் செய்ய பதிவுசெய்து வைத்துஇருப்பர்.ஆனால் பார்வையற்றோர் கண்தானம் பெற அதற்காக நிறையவருடங்கள் காத்திருக்கவேண்டும்.இருப்பினும் நம்மால் இப்பொழுதே உதவமுடியும்.எவ்வாரெனில் நமது வீட்டிற்க்கு அருகில் ஒரு இறப்பு நிகழும்பொழுது நாம் அங்குசென்று அவர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறினால் கூடுமானவரையில் அங்கு கண்தானம் நடக்க வாய்ப்புஉண்டு. 24 மணி நேரத்திற்க்குள் அந்த கண்கள் இருநபர்களுக்கு பொருத்தப்படும். ( தொடரும் )

சிறுதுளி - தொடர்ச்சி

இயற்கை வேளாண்மை பயிற்சி பற்றி மேலும் அறிய 093631-47111, 093446-61647, 098946-31551 தொலைபேசி எண்களில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

Tuesday, February 26, 2008

சிறுதுளி - பெருவெள்ளம்

கோவை வாழ் மக்கள் சிலரால் துவங்கப்பெற்ற சிறுதுளி அமைப்பு காஞ்சிமாநதி எனும் நொய்யல்நதி பற்றிய விழிப்புணர்வை கோவைமாவட்டமக்களிடம் ஏற்படுத்தியது மறக்கமுடியாத நிகழ்வு.இப்பொழுது பாலேக்கர் எனும் இயற்கைவிஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ZERO BUDGET விவசாயம் பற்றிய பயிற்சிவகுப்புகளை நடத்த உள்ளனர்.மார்ச் 22,23,24,25 தேதிகளில் கோவையில் நடக்க உள்ளது. 4 நாட்கள் உணவு, தங்குமிடம் சேர்த்து ரூ.400 மட்டும். விவசாயத்தில் நலிவுற்ற உழவர்களுக்கு இந்த செய்தியை கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காந்தியம் -தொடர்ச்சி

திரு.நா.மார்கண்டன் அவர்களது அஞ்சல் முகவரி;

முன்னாள் துணைவேந்தர்,

காந்திகிராம பல்கலைகழகம்

இலக்கம் 5, இந்திராணி இல்லம்,

சத்தி முதல் குறுக்கு சந்து,

G.P.மருத்துவமனை எதிர்புறம்

காந்திபுரம்,

கோவை.641012

காந்தியம் - பயிற்சிவகுப்பு

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் தனிமனித பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகளை காந்தியவழியில் எப்படி எதிர்கொள்வது என்ற கருத்தினை முன்வைத்து திரு.நா.மார்கண்டன் அவர்கள் ஒரு முகாம் நடத்த உள்ளார்.ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்வதுடன் பிறருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்பு முகவரி
திரு.நா.மார்கண்டன்
முன்னாள் துணைவேந்தர்
காந்திகிராம பல்கலைகழகம். செல்பேசி 094433 49227